நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் பார்களுக்கு பரந்தது புதிய உத்தரவு!
