இது தொடர்பாக அவர் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் வில்லடிச்சா மாடன’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். இதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கதாபாத்திரம் இதை செய்வது போல சித்தரிக்கப்படுகிறது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இயக்குநர் பாலா, அந்தக் கலையில் தேர்ந்த பெண்ணிடம் செய்து காட்டும்படி கூறினார். அவர் முடித்ததும், உடனே பாலா ஓகே நாம் இப்போது டேக் போகிறோம் என்றார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அதைக் கற்றுக்கொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது. 3 டேக்குகள் எடுத்தேன். அப்போது அவர் நிறைய திட்டினார். முன்னதாக, நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க என இயக்குநர் பாலா சொல்லியிருந்தார். இருந்தாலும், அந்த நேரத்தில் அவரின் திட்டு என்னை காயப்படுத்தியது. இத்தகைய அனுபவம் தான் என்னை ‘வணங்கான்’ படத்திலிருந்து வெளியேறச் செய்தது என்று தெரிவித்தார்.