தை மகள் பிறந்த நிலையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து 2024 தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.’என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையின் மூலம் கணிசமான அரசியல் ஏற்றத்தை பெற்றுள்ள அண்ணாமலையை, தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பாதயாத்திரை நிறைவு செய்ய வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
ஊழல் வழக்குகள் அமைச்சர்களுக்கு சிறை என திணறிக் கொண்டிருக்கும் திமுக, அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக பதவியேற்க முடிவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கழட்டிவிட்ட நிலையில் சிறுபான்மையினர் ஆதரவு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, தேமுதிகவை உள்ளே இழுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
4 மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் தேமுதிக கோரி உள்ள நிலையில் அதிமுகவை திருப்தி படுத்த திமுகவுக்கு எதிரான போராட்டத்தையும் அறிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் தினத்தை மகரசாந்தி யாகவே கொண்டாடப் போவதாக தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களிலும் எந்த வரலாற்றிலும் பொங்கல் என்ற சொல்லே இல்லை என்றும் மகரசங்கராந்தி என்றே கொண்டாடப்பட்டு வந்ததாகவும்? திராவிட சிந்தனையாளர்களே பொங்கல் என்ற சொல்லை புகுத்தியதாகவும் பாஜகவினர் விமர்சிக்கின்றனர்.