சம்பள பாக்கி – மனிஷா புகார்!

பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் வழக்கு எண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நினைவெல்லாம் நீயடா என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்திரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கி உள்ளார். இந்நிலையில் மனிஷா, தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நினைவெல்லாம் நீயடா படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்து உள்ளார். இந்த புகார் மனுவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!