எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன்இ சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் யோகி பாபுவின் தூக்குத்துரை திரைப்படம் மற்றும் சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நடித்திருக்கும் முடக்கறுத்தான் திரைப்படம் வரும் ஜன. 25ஆம் தேதி வெளியாகிறது.
நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகிபாபு நடித்துள்ள லோக்கல்இ நவீன்குமார் சந்திரன் இயக்கி நடித்துள்ள நியதிஇ த. நா. என்ற திரைப்படம் குடியரசு நாளை முன்னிட்டு ஜன. 26 ஆம் தேதி வெளியாகிறது.
மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.