இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக தொண்டர்களுடன் தனது வாக்குச்சாவடி வலிமையானது என்ற தலைப்பில் உரையாட ஆவலாக காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் மக்களுடன் பணியாற்றுவதும், நமது ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பாராட்டுக்குரியது. திமுகவின் தவறான ஆட்சியால் சோர்ந்து போன தமிழகம், பாஜக மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.