வீட்டு பணிப்பெண் சித்ரவதை.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம் பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்காக சேர்க்கப்பட்டார்‌. மேலும் ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இளம்பெண் துன்புறுத்தப்பட்டதாக திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!