திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே மோரை ஊராட்சிக்கு உட்பட்ட வீராப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மலர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இதில் மோரை ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திக், பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.