இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு.

இந்தியாவின் பன்நிலை வறுமை சூழல் குறித்த குறியீட்டை ‘நித்தி ஆயாக்’ வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் கல்வி, பொருளாதாரம்’ கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோலின் அடிப்படையில்மக்களின் வறுமை நிலைக் குறித்து பெறப்பட்டதகவலின்அடிப்படையில்’நித்தி ஆயோக்” இந்த குறியீட்டை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2005-06-முதல் 2022 -2023 ஆண்டுகளின் அறிக்கைகளின் விவகாரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.அதன்படி இந்தியாவில் 2013- 14 ஆண்டுகளில் 29.17 % இருந்த பன்முக வறுமை நிலை 2022-2023 ஆம் ஆண்டுகளில் 11.28% மாக சரிந்துள்ளது.இதன் மூலம் 24.82 கோடி வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.வறுமை ஒழிப்பில் உத்திரபிரதேசம் முதலாவதாக உள்ளது. அம்மாநில அரசு 5.94 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளது.

இதற்காக அடுத்தபடியாக பீகார் மாநிலத்தில் 3.77 ஏழு கோடி மக்களையும்
மத்தியபிரதேச மாநிலத்தில் 2.30 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

கல்வி, பொருளாதாரம் உட்கட்டமைப்பு உள்ளிட்ட 12 வகையான கணக்கீட்டின் அடிப்படையில் ‘நித்தி ஆயோக்’ அமைபின் குறியீட்டின் படி இந்த மாநிலங்கள், வறுமை ஒழிப்பில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளன.

இந்த நிலையில் 2024-
2025 ஆம் ஆண்டு ஆண்டில் இந்தியாவின் வறுமை நிலையை ஒற்றை இலக்கில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ‘நித்தி ஆயாக்’ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!