போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 30 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனைக்கான முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!