சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், லெஜண்ட் சரவணன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில், புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணன் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது, நடிகர் சூரியை வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் லெஜண்ட் சரவணன் அவரது புதிய படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/01/sarvanan.jpg)