பிரதமர் நேரந்திர மோடியும் பாஜக தலைவர்களும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தங்கள் குடும்பம் பிழைப்பதற்காக நாட்டை சீரழித்;து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சகட்ட வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமருக்கு குழந்தை இல்லை, வாரிசு இல்லை என பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் பேசிய பேச்சு பாஜகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. லாலுவின் பேச்சுக்கு பதிலடியாக, அமித்ஷா, உள்ளிட்ட அமைச்சர்கள் மூத்தத் தலைவர்கள் தங்களது பெயர்களுக்கு பின்னால் மோடிக்கா பரிவார் அதாவது மோடியின் குடும்பம் என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பதிவு நாடுமுழுவதும் ரெண்ட் ஆகி வருகிறது. லாலுவின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெலாங்கான கூட்டத்தில் உடனடியாக பதிலடி கொடுத்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி உச்சகட்ட கொந்தழிப்பில் பேசிய பேச்சுகள் தற்போது நாடு முழுதும் வைரலாகி வருகிறது. நாடு தான் என் குடும்பம், இந்த நாட்டு மக்கள் தான் என் குடும்பம் என சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியதுடன் திமுக அரசை கடுமையாக சாடினார்.
.நான் தமிழ்நாட்டிற்கு வந்தால் சில போருக்கு பயம் வந்து விடுகிறது என கூறிய அவர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தி கூட்டணி கட்சிகள்? தங்களின் சொந்த குடும்பங்களுக்காக முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் தேசத்திற்கே முன்னுரிமை என்று தான் கூறுவதால் என் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைப்பதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டத்தால் கொள்ளையடிக்க முடியாமல் திமுக குடும்பம் திணறி வருகிறது என்றும் திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேரும் என்றும் இதுவே என் உத்தரவாதம் என்றும் பிரதமர் உரத்த குரலில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நான் 15 வயதில் இருந்தே நாட்டைப்பற்றி சிந்திக்கிறேன், அதற்காகவே குடும்பத்தை துறந்தேன், மோடிக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.
நாம் அனைவரும் சேர்ந்துதான் மோடியின் குடும்பம். இந்த நாடு தான் என் குடும்பம் என்று கூறிய பிரதமர் நாட்டு மக்களுக்காக அரசியல் செய்கிறேன், நாட்டு மக்களின் நலனை நினைத்து அரசியல் செய்கிறேன் என்று கூறினார். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், பலகோடி ரூபாய் போதைப் பொருள் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி ஜபர் சாதிக் சிக்கி உள்ள நிலையில்,போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை பிரதமர் கடுமையாக விமர்சித்தார். மேலும்,தமிழகத்தில் போதை பொருள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. போதை பொருள் புழக்கத்தால் தமிழக மக்கள் கவலையில் உள்ளனர். குந்தைகளின் எதிர்க்காலத்தை அழிக்கும் வகையில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை திமுக அரசு ஊக்குவித்து வருவதாக நேரடியாக சாடிய பிரதமர், தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் எந்த விலை கொடுத்தாவது தேசத்தை தூய்மையாக்குவேன் என சூளுரைத்தார். மக்களவை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமரின் இந்த ஆவேச பேச்சு தமிழக அரசியில் பெரும்; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…