அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான தொலைக்காட்சிகள், வலைதள பக்கங்கள் மூலயமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதன் உரிமையாளர் பாஸ்கர் ஏற்பாட்டில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். மேலும் பஜனை பாடல் குழு ஏற்பாடு செய்யப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை பாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவேற்காட்டில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு பஜனை பாடல்கள் பாடப்பட்டது.
