பலகோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்-ஐ தேடும் பணியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜாபர் சாதிக்கும், அவருடன் அரசியல்வாதிகள் இரண்டு பேரும் கென்யா சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த அரசியல் பிரமுகர்கள் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பப்படும் தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தகவலை அடுத்து அந்த கிடங்கில் போதைப் பொருள் கடத்தல் பிரிவுப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு உணவுப் பொருட்களில் பதுக்கி வைக்கபட்டிருந்த 75 கோடி ரூபாய் மதிப்புள்ள சூடோபெட்ரின் என்கிற வேதிப்பொருள் சிக்கியது. இந்த வேதிப்பொருள் மெத்தம்போட்மைன் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்து கூடியதாகும். இந்நிலையில் டெல்லி கிடங்கில் இருந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர்களில் இருவர் சென்னையை சேர்ந்த முகேஷ் முஜிபுர் மற்றும் ஒருவர் விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது.. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பலுக்கு தலைவனாக, திமுகவின் அயலகப் பிரிவு நிர்வாகியாக இருந்தவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் செய்யல்பட்டு வந்தது தெரியவந்தது.
அது மட்டுமன்றி கடந்த மூன்று மாதங்களில் 2.000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதும் அந்த பணத்தை சினிமா தயாரிப்பு, உணவு விடுதிகள் உள்ளிட்ட தொழில்களில் ஜாபர் முதலீடு செய்தது வந்ததாக கிடைத்த தகவலும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அமீர் இயக்கி வரும் “இறைவன் மிகப் பெரியவன்’ படத்திற்கும் ஜாபர் சாதிக் முதலீடு செய்ததும் அம்பலமானது. இதனைதொடர்ந்து ஜாபல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல் முக்கிய அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்களுடன் ஜாபர் சாதிக் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து சாதிக் ஆஜராக, சென்னை மையிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் ஒட்டிவிட்டு சென்றனர்.
ஆனால் சாதிக் தலைமைறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் ஆவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூட்டிக்கிடந்த ஜாபர் வீட்டை உடைத்து நடத்தப்பட்ட சோதனையில் நிலம் வங்கி கணக்குள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த வீடு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜபார் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் அவர் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஜபார் ரொக்கமாக பணம் வைத்திருக்க கூடும் என்ற ஐய்யம் எழுந்துள்ளதால் அதை தடுப்பதற்கும் தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜபார் கென்யா நாட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருடன் அரசியல் பிரமுகர்கள் இரண்டு பேர் சென்றதாக வெளியான தகவல் பரப்பரபை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த தேசிய போதைப் பெருள் தடுப்பு முகமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் என்சிபியின் விசாரணை சில அரசியல் பிரமுகர்களை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது