திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் உள்ள புதிய கன்னியம்மா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவிற்கு மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி பள்ளி வகுப்பறையை தொடங்கிவைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் தயாளன், மாவட்ட கவுன்சிலர் சதீஷ், மோரை ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திக், ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் பரணி, வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் மேரி ஜாஸ்மின், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் திருமால் உட்பட வார்டு உறுப்பினர் அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா!
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/02/diva.jpg)