ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் தலைவராக இருப்பவர் வி.கே. பாண்டியன். குழுவாக பணியாற்றுதல், வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பின்னர் ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர், 5டி தலைவராக ஆக்கப்பட்டார். இந்நிலையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெல்லாகுந்தா பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வி.கே. பாண்டியன் வந்துள்ளார். அப்போது, அவரை நோக்கி தக்காளி வீசப்பட்டு உள்ளது. அவர் சற்றும் எதிர்பாராதபோது நடந்த இந்த நிகழ்வை அடுத்து, தக்காளி வீசியவரை சுற்றியிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். பின்னர் அவரை போலீசார் மீட்டு, கைது செய்து அழைத்து சென்றனர்.
ஒடிசா மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன் – வி.கே. பாண்டியன்
