மக்களவைத் தேர்தல் அறிவிப்பை அனேகமாக வரும் மார்ச் 13 – 14 தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் எனத் தகலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிட்டவுடனேயே, வழக்கம்போல, தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிடும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி அறிவதற்காக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையக் குழுவினர் சென்று தேர்தல் அலுவலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்திருக்கின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு, மார்ச் 10 ஆம் தேதியும் 2014 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் மார்ச் 13, 14-ல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்?
