சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெரும்!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. ரூ.279 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த பணிகளுக்காக கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாரிப்போட்டைவரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இப்போது ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்து இயக்கப்படுவதால், அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். 6 மாதத்தில் 4-வது ரயில்பாதை பணிகள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில் அறிவித்த நிலையில், சொன்னபடி பணிகளை முடிக்கவில்லை. அதேநேரம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி பணிகளை முடித்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில், நான்காவது பாதை அமைக்கும் பணிகளுக்கான கண்டவாளம் அமைப்பதற்காக கூவம் ஆற்றில் 500 இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும், பக்கிங்காம் கால்வாயில் 3 சிறிய பாலப் பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாகவும். இதேபோல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி அதில் எல்லைச் சுவர் கட்டும் பணி முடிக்கப்பட்டிருப்பதாகவும். இதன் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-வது ரயில்பாதை திட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், எழும்பூர் கடற்கரை இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி வருகிற ஜூன் மாதம் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!