பாஜகாவுடனான கூட்டணியை முறித்து கொண்டால், மதசார்பின்மை பேசும் கட்சிகளும், இல்லாமிய கட்சிகளும் தங்கள் கூட்டணிக்கு வந்து விடுவார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை எளிதில் இழுத்து விடலாம் என்று கணக்கு போட்டே இபிஎஸ் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அரசியல் நோக்கர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவே அவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் கூட்டணி பேச்சு வார்த்தையை அதிமுக அதிகாரப்பூர்வமாக தொடங்கியும் இதுவரை பெரிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்;படவில்லை. குறிப்பாக திமுக கூட்டணியில் மூச்சு முட்டும் அளவிற்கு பிரச்சனைகள் இருந்தாலும்.
அங்கிருந்து எந்த கட்சியையும் அதிமுகவால் இழுக்க முடியாத நிலையே உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் நீண்ட நாள்களாக புரட்சி பாரதம் கட்சிக் கூட ராஜசபா சீட் கொடுக்க மறுத்ததற்கு கடும் அதிருப்தியடைந்து விட்டதாம். சென்டிமெண்டாக கோபித்து கொண்டாராம் அதன் தலைவர்.கடைசியாக ஒரு சீட்டுக் கொடுக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொரு கட்சியும் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாகவும், அதேவேளையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கே சாதகமாக உள்ளதால் அந்த கூட்டணிக்கு செல்லவே விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மிகவும் நம்பி இருந்த ஜிகேவாசன், பாஜக கூட்டணியில் இணைந்ததும் இபிஎஸ் அப்செட் ஆனார். இந்நிலையில் வேறு வழியில்லாமல் கூட்டணிக்கு கட்சிகளை கூவி அழைக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை மெய்பிக்கும் வகையில் சில நிகழவு;களும் அரங்கேறி வருகின்றன. திமுக கூட்டணியில் மூன்று இடங்களை கேட்டு விசிக பிடிவாதமாக உள்ள நிலையில் தொகுதி உடன்பாடு இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விசிகவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அவர் கூறியது பரபரப்பான செய்தியாக மாறியது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே, அதே ஜெயக்குமார், கூட்டணிக்காக யாரிடமும் நாங்கள் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று வழக்கம் போல் பேசி மீண்டும் டீவிஸ்ட் வைத்துள்ளார். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…