தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக கவுன்சிலர்கள் அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர். இதனையடுத்து செங்கோட்டை நகர மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களில் திமுகவை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த 13 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். மேலும் வாக்கெடுப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கூட்டரங்கில் அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போதிய கவுன்சிலர்கள் வராததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக நகராட்சி ஆணையாளர் சுகந்தி அறிவித்தார். இதனை அடுத்து கவுன்சிலர்கள் ஆணையரிடம் வாக்கெடுப்பு நடத்த கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி… நகர்மன்ற தலைவர் பதவி தப்பியது.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/01/akka.jpg)