தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 33 வார்டு பகுதிகளில் இருந்தும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 20 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபிக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். அந்த மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை!
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/02/tankasi.jpg)