கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும்…

Read More

நமோ செயலி மூலமாக தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக தொண்டர்களுடன் தனது வாக்குச்சாவடி வலிமையானது என்ற தலைப்பில் உரையாட ஆவலாக காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் மக்களுடன் பணியாற்றுவதும், நமது ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பாராட்டுக்குரியது. திமுகவின் தவறான ஆட்சியால் சோர்ந்து போன தமிழகம், பாஜக மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Read More

மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவை தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது என்று குற்றம்சாட்டினார். பெட்ரோல்,…

Read More

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி – பில் கேட்ஸ் ஆலோசனை.

டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் டீப் பேக் தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடும். உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் என்றும் இந்த டீப் பேக் வீடியோ…

Read More

மாஸ்கோவில் கொடூர தாக்குதல் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி பயங்கரமாக சுட்டுத்தள்ளினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போர்க்களம் போல் காட்சி அளித்த அப்பகுதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி, தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள்…

Read More

காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுடன் கைகோர்த்த பிரிட்டன் – வங்கி கணக்குகள் முடக்கம்.

காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுடன் கைகோர்த்த பிரிட்டன் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 5,000க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாத செயல்கள் இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில் அவற்றை ஒடுக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிவாத செயல்களுக்கு…

Read More

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்துள்ளார். நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு 7.2 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில் அவரின் நிகர சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதனால் ஆமேசான் நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்- பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன்…

Read More

இமாச்சலில் மாயமான தனது மகன் வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், அவரது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். அவரை தேடும் பணி…

Read More

5 நாள் பயணமாக ஐ.நா. தலைவர் இந்தியா வருகை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது மராட்டிய மாநிலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவர் மும்பை , ஜெய்ப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில்…

Read More

ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா!

வாஷிங்டன்: செங்கடல் சர்வதேச வணிகப் பாதையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு காரணமாக இருப்பதாக ஏமனின் ஹவுதி படையை சர்வதேச பயங்கரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு…

Read More
error: Content is protected !!