
தமிழகம்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெரும்!
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. ரூ.279 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த பணிகளுக்காக கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாரிப்போட்டைவரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இப்போது ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை…

போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!
ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் அண்மையில் ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது….

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு!
கடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பா.ஜ.க.வுடன் இணைத்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்றார். அங்கு சரத்குமாருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவரது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துக்கொண்டார். பா.ஜ.க.வுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மக்கள் பணிக்கான தொடக்கம் என்று கூறினார். மேலும், நாட்டின்…

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 30 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி…

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் அருகே சிறுவள்ளூர் கிராமத்தில் 1.75 லட்சம் சதுர மீட்டர் அளவிலான நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், நில எடுப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் எனவும்…

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் இ.சி.அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வழக்கறிஞர் புல்கித் தாரேவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க…

பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் ஏற்பாடுகள் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவுடன் புதிய தமிழகம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியை அறிவித்துள்ளன. திமுகவில் வழக்கமான தோழமை கட்சிகளோடு உடன்பாடு ஏற்பட்டு அதே கூட்டணி தொடர்கிறது. ஆனால் அதிமுகவில் இன்று வரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்று வருகிறதே தவிர அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி சிலர் பாஜகவில்…

பனியன் ஏற்றுமதி வணிகத்திற்கு பெயர் போன திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களின் பங்களிப்பே அதிகம் – பத்ம ஸ்ரீ டாக்டர் சக்திவேல்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையத்தை அமைப்பதற்கு புது டெல்லியில் உள்ள ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய மையத்திற்கான துவக்க விழாவை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி மற்றும் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன்…

போதைப் பொருள்கடத்தல் கும்பல் தலைவன் மீது பாய்ந்தது ஈடி விசாரணை!
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை பாய்ந்து உள்ளது. இதன் மூலம் போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் யார் யாருக்கெல்லாம் சென்றுள்ளது என்றும் அதன் மூலம் யார் யாரெல்லாம் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பப்படும் தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில்…