
தமிழகம்

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.
நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், விழா நடைபெறும் தினம் மற்றும் ஒத்திகை நடைபெறும் நேரத்தில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான…

வீட்டு பணிப்பெண் சித்ரவதை.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம் பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். சென்னை திருவான்மியூர் பகுதியில்…

செங்கோட்டை நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி… நகர்மன்ற தலைவர் பதவி தப்பியது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக கவுன்சிலர்கள் அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர். இதனையடுத்து செங்கோட்டை நகர மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களில் திமுகவை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த 13 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். மேலும் வாக்கெடுப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கூட்டரங்கில் அனுமதி இல்லை என…

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். உலக புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதி, அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி…

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து காண்போம்
இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் எப்போதுமே பஞ்சமிருக்காது. பெரும்பாலும், பண்டிகைகளுடன் இணைந்து வருவது இந்த வீர விளையாட்டுகள்தான். அதிலும் தமிழர்களின் பெருமைபேசும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இன்றும் பயணிக்கின்றன. அதில் ஒன்றுதான், ஜல்லிக்கட்டு விழா. இதில், எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைக்கப்படும். தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் தொன்மை கொண்டிருக்கிறது. பண்டைக் காலத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு…

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது?
பொங்கல் கொண்டாட்டம் தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். இது உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. போகி முதல் காணும் பொங்கல் வரை நான்கு நாட்களுக்கு கொண்டாப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதுமே வெவ்வேறு மாநிலத்திலும் அந்தந்த பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், மற்ற மாநிலங்களில் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது….