
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு…

மானாமதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் வகை வகையான சீதனங்களை வாரி வழங்கிய உறவினர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பீசார்பட்டினம் பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பெரியகண்ணனூரைச் சேர்ந்த பொறியாளர் அரவிந்துக்கும், கீழமேல்குடியைச் சேர்ந்த பட்டதாரி சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. விழாவில், நகைகள், பாத்திரங்கள் சீர்வரிசையோடு, மணமகள் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, ஆடு, நாய், கோழி உள்ளிட்டவைகளை சீதனமாக குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதை பெற்று கொண்ட மணமக்கள் சந்தியா, அரவிந்த் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடியில் 1 கோடி ரூபாய் செலவில் வீரமாமுனிவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறிஸ்தவ சமய தொண்டாற்றுவதற்காக மதுரைக்கு வந்து தமிழ் கற்கத் தொடங்கி, பின்னர் தமிழில் பல்வேறு நூல்களை எழுதினார். தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததுள்ளார். குட்டி தொல்காப்பியம் என்று புகழப்படும் தொன்னூல் விளக்கம், இயேசு நாதரின் வரலாற்றைக் கூறும் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள்…

குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர…

திருவேற்காட்டில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டதோடு பஜனை பாடல்கள் பாடப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான தொலைக்காட்சிகள், வலைதள பக்கங்கள் மூலயமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதன் உரிமையாளர் பாஸ்கர் ஏற்பாட்டில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். மேலும் பஜனை பாடல் குழு ஏற்பாடு செய்யப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்கள் அனைவரும்…

6 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, ஆறு ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம்.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு சென்று அங்கு உள்ள ராம மந்திரம் எந்திரத்தையும்,ராமரிடம் பணிவாக உபதேசம் கேட்கும் ஆஞ்சநேரையும் தரிசனம் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று…

மதுரை கூடலழகர் பெருமாள் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 47வது கோவிலாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்றதை அடுத்து ஸ்ரீ தேவி, பூதேவி, சமய சுந்தரராஜ பெருமாள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு வேதவிற்பனர்கள் மந்திரம் முழங்க கோவிலில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கூடல் அழகர்…

சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மாநாட்டு திடலுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்றடைந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா கலைஞர்களின் நடனம், கேரள செண்டை மேளம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில், இன்று திமுக இளைஞரணியின் 2-வது மாநில…

டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். அயோத்தி ராமர்…