தமிழகம்
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு -ஏப்.1-ம் தேதி முதல் அமல்!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ம் தேதி சுங்கச் சாவடிகளிலும், செப்.1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில்…
பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த உச்ச நீதிமன்றம் பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி, அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் இன்று மீண்டும்…
பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!
நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பா.ஜ.க.வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400…
குமரி மக்களின் கோரிக்கையான இரட்டை ரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்!
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார். நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்; என்று தெரிவித்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில்…
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் சார்பில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 5 முறை வருகை தந்துள்ளார். அந்த வகையில் , கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர…
குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது – அண்ணாமலை பேச்சு.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்…
பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.இந்த பொதுக்கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள…
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராயநகர், பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 9ந்தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது….
விழுப்புரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து கருத்து கேட்பு பாஜக தொடக்கம்!
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்க்கப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் வகையில், மண்டலம் வாரியாக தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து, பொதுமக்களிடம் படிவத்தை வழங்கி அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில்…
மோரை ஊராட்சியில் உயர் கோபுர குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் பங்கேற்பு!
திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் புதியகன்னியம்மாநகர், அண்ணாநகர், வீராபுரம், பங்காருப்பேட்டை, மோரை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மோரை ஊராட்சி மன்ற தலைவராக ஆர்.திவாகரன் வெற்றிபெற்றதை அடுத்து மோரை ஊராட்சி பகுதிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் மோரை ஊராட்சியில் உள்ள 12வது வார்டுக்கு உட்பட்ட தண்டாயுதபாணி நகர், தாய் மூகாம்பிகை நகர், குமரன் நகர், சுப்பிரமணியம் நகர் மற்றும் அதனை…