அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவர் ஸ்ரீ பாலராமர் சிலை கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்ற கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடர்ந்து, ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் ராமர் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ராமர் கோயிலின் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல்…

Read More

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடிஇ சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற விஜய்யின் கட்சி பெயரில்இ க் விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து…

Read More

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா!

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சியில் உள்ள புதிய கன்னியம்மா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவிற்கு மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக…

Read More

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு…

Read More

கோவையில் ராயல்கேர் மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம், பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மருத்துவ துறையில் நோயை கண்டு பிடிக்கவும்,நோயை குணப்படுத்தவும்,மருத்துவ கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த டெக்னீஷயன்கள் பாதுகாப்பாக கையாள்வது குறித்த கருத்தரங்கம் கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இந்தியன் ஃபார்மாகோப்பியா கமிஷன் மற்றும் மத்திய அமைச்சகத்தின் குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் இணைந்து நடத்திய விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,எம்.வி.பி.ஐ.முதன்மை விஞ்ஞானி கலைசெல்வன், மருத்துவர்கள்…

Read More

வெறிநாய் தொந்தரவை கட்டுப்படுத்த நகர்மன்ற உறுப்பினர் கோரிக்கை!

தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 33 வார்டு பகுதிகளில் இருந்தும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 20 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபிக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். அந்த மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள்…

Read More

பள்ளி ஆண்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் பங்கேற்பு!

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே மோரை ஊராட்சிக்கு உட்பட்ட வீராப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மலர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்….

Read More

சம்பள பாக்கி – மனிஷா புகார்!

பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் வழக்கு எண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நினைவெல்லாம் நீயடா என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா…

Read More

பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

முகூர்த்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. மல்லிகை பூ இன்று ரூ.1இ100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கனகாம்பரம் இன்று ரூ.1இ000க்கு விற்கப்படுகிறது. அதேபோல பன்னீர் ரோஸ் ரூ.80இ அரளிப்பூ ரூ.70இ சாமந்திப்பூ ரூ.80இ சாதி மல்லி ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read More
error: Content is protected !!