சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் இ.சி.அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வழக்கறிஞர் புல்கித் தாரேவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க…

Read More

பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் ஏற்பாடுகள் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவுடன் புதிய தமிழகம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியை அறிவித்துள்ளன. திமுகவில் வழக்கமான தோழமை கட்சிகளோடு உடன்பாடு ஏற்பட்டு அதே கூட்டணி தொடர்கிறது. ஆனால் அதிமுகவில் இன்று வரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்று வருகிறதே தவிர அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி சிலர் பாஜகவில்…

Read More

பனியன் ஏற்றுமதி வணிகத்திற்கு பெயர் போன திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களின் பங்களிப்பே அதிகம் – பத்ம ஸ்ரீ டாக்டர் சக்திவேல்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்திற்கான பிரத்யேக மையத்தை அமைப்பதற்கு புது டெல்லியில் உள்ள ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய மையத்திற்கான துவக்க விழாவை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் அதுல் குமார் திவாரி மற்றும் ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன்…

Read More

தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கலாம். எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது….

Read More

போதைப் பொருள்கடத்தல் கும்பல் தலைவன் மீது பாய்ந்தது ஈடி விசாரணை!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை பாய்ந்து உள்ளது. இதன் மூலம் போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் யார் யாருக்கெல்லாம் சென்றுள்ளது என்றும் அதன் மூலம் யார் யாரெல்லாம் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பப்படும் தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில்…

Read More

ஆவடி அருகே கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே வாணியம்சத்திரத்தில் உள்ள தனியார் மஹாலில் சேபா அகடாமி, சேபா டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சேபா அகடாமி நிறுவனத்தின் தலைவரும், மாஸ்டருமான சங்கீதா ராஜா தலைமை தாங்கினார். இப்போட்டியில் திருவள்ளுர், கோவை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் கராத்தே பள்ளிகளில் பயிற்சி பெறுவோர் கலந்து கொண்டனர். போட்டிகளை ஆவடி சி.ஆர்.பி.எப். காமண்டனட் நர்வீர்…

Read More

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து…

Read More

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வரும் 11ம் தேதி வெளியீடு?!

தமிழக பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றனர். கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழக குழுவினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர். இதற்கிடையில் அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள். மீண்டும் வருகிற 11-ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். மறுநாள் 12-ந்தேதிக்குள் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்…

Read More

அதிமுக சார்பில் தேர்தலில் நிற்க மறுக்கும் வேட்பாளர்கள் – வலுக்கட்டாயமாக விருப்ப மனு தாக்க செய்ய உத்தரவிட்ட எடப்பாடி!

மக்களவை தேர்தல் கூட்டணிக்கான கதவுகளை இதுவரை பெரியக்கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமால் இழிபறியே நீடித்து வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக முறித்து காரணங்களால், அதிருப்தியடைந்துள்ள நிர்வாகிகள், பலர் மக்களைவை தேர்தலில் போட்டியிட்ட தயங்கி விருப்ப மனுக்களை கூட தாக்கல் செய்யாமல் நழுவி விட்டனர். இதனால் கடும் கோபமடைந்த இபிஎஸ், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் கட்டாயம் விருப்பமனுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதலமைச்சர்? என்ற கேள்வி எழுந்தது….

Read More

பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் – பிரதமர் மோடி பேச்சு!

பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல்முறையாக காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரில் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் விழாவில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த 5,000 கோடி மதிப்பு திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…

Read More
error: Content is protected !!