
சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மாநாட்டு திடலுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்றடைந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா கலைஞர்களின் நடனம், கேரள செண்டை மேளம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில், இன்று திமுக இளைஞரணியின் 2-வது மாநில…