கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி விட்டுக்கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும்…

Read More

நமோ செயலி மூலமாக தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக தொண்டர்களுடன் தனது வாக்குச்சாவடி வலிமையானது என்ற தலைப்பில் உரையாட ஆவலாக காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் மக்களுடன் பணியாற்றுவதும், நமது ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பாராட்டுக்குரியது. திமுகவின் தவறான ஆட்சியால் சோர்ந்து போன தமிழகம், பாஜக மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Read More

மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவை தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது என்று குற்றம்சாட்டினார். பெட்ரோல்,…

Read More

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி – பில் கேட்ஸ் ஆலோசனை.

டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் டீப் பேக் தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடும். உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் என்றும் இந்த டீப் பேக் வீடியோ…

Read More

தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு -ஏப்.1-ம் தேதி முதல் அமல்!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ம் தேதி சுங்கச் சாவடிகளிலும், செப்.1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில்…

Read More

மாஸ்கோவில் கொடூர தாக்குதல் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி பயங்கரமாக சுட்டுத்தள்ளினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போர்க்களம் போல் காட்சி அளித்த அப்பகுதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி, தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள்…

Read More

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த உச்ச நீதிமன்றம் பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி, அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் இன்று மீண்டும்…

Read More

பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பா.ஜ.க.வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400…

Read More

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதற்காக விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை…

Read More

குமரி மக்களின் கோரிக்கையான இரட்டை ரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்!

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார். நாட்டை துண்டாட வேண்டும் என நினைப்பவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்; என்று தெரிவித்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில்…

Read More
error: Content is protected !!