23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி…

Read More

மும்பையில் அசோக் சவானுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜுர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த…

Read More

ஆந்திரா அருகே சுற்றுலா பேருந்து மோதி 8 பேர் பலி.

சென்னை வடபழனியில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று 23 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சென்று கொண்டிருந்து. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு…

Read More

டெல்லி முதலமைச்சரின் தனிச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிம்ஹவ் குமார் வீட்டில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், ஆம் ஆத்மி…

Read More

திருப்பதி தேவஸ்தானத்தில் ஏப்ரல் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024 ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 24ம் தேதி காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு ஜனவரி 24-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஏப்ரல் மாதத்துக்கான, திருப்பதி திருமலையின் ஏழுமலையான் சேவை ஒதுக்கீடு ஜனவரி 27 அன்று காலை 11 மணிக்கும், நவனிதா சேவா…

Read More

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் உச்சநீதிமன்றத்தில் 13 முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உள்பட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அயோத்தி கோயில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று உச்சநீதிமன்றத்தின் 13…

Read More

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் – பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் சம்விதான் சதானில் உள்ள நேதாஜி…

Read More

அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே கூட்டம் நிரம்பியுள்ளது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணி முதலே, கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர். முதல் தரிசனத்தை காண வேண்டும் என்ற உந்துதலால் ஆயிரக்கணக்கானோர் இன்று காலையிலேயே கோயிலுக்குள் குவிந்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த அளவுக்குக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி…

Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில கேமராக்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதியில், சாதாரண உடை அணிந்த போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பல மொழிகள் அறிந்த போலீசாரின் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நடமாடும் தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சரயு…

Read More

அயோத்தியில் அனைத்து இடங்களிலும் காவிக்கொடிகள் காட்சி படுத்தப்படுகின்றன.

அயோத்தியில் இன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது. ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா. பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இனி, அயோத்தி வரும் பக்தர்களுக்கு பால ராமர் காட்சிதர உள்ளார். இதையொட்டி, மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி…

Read More
error: Content is protected !!