தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதற்காக விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை…

Read More

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதேபோல் ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பாக வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலையும், 4 மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் கால அட்டவணை தொடர்பான அறிவிப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என…

Read More

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்துள்ளது!

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி மத்திய அரசு அமைத்தது. முன்னாள் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ்…

Read More

செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது என்று கூறினார். 3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது இந்தியாவின் பொருளாதார…

Read More

மக்களவைத் தேர்தல் நேரத்தில் பொய் தகவல்கள் பரவலைத் தடுக்கும் கூகுள்!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட பதிவில், தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்பட தேர்தல் சார்ந்த…

Read More

குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத்தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் தடுப்பு…

Read More

அரியானா மாநில முதல்வராக நயாப் சைனி பதவியேற்கிறார்!

அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜ.க. – ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக…

Read More

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது!

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019ம் ஆண்டு பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. கடும்…

Read More

தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கலாம். எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்தது….

Read More

பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் – பிரதமர் மோடி பேச்சு!

பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல்முறையாக காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரில் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் விழாவில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த 5,000 கோடி மதிப்பு திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…

Read More
error: Content is protected !!