மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்க்கப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் வகையில், மண்டலம் வாரியாக தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து, பொதுமக்களிடம் படிவத்தை வழங்கி அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் படிவம் வழங்கப்பட்டு, அதில் தங்கள் பகுதிக்குத் தேவை , என்ன குறை உள்ளது போன்ற கருத்துகள் பெறப்பட்டன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் தேர்தல் அறிக்கை பெட்டியில் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுச் செயலர் எல்.சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கலிவரதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழுப்புரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து கருத்து கேட்பு பாஜக தொடக்கம்!
