தூத்துக்குடியில் 1 கோடி ரூபாய் செலவில் வீரமாமுனிவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறிஸ்தவ சமய தொண்டாற்றுவதற்காக மதுரைக்கு வந்து தமிழ் கற்கத் தொடங்கி, பின்னர் தமிழில் பல்வேறு நூல்களை எழுதினார். தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததுள்ளார். குட்டி தொல்காப்பியம் என்று புகழப்படும் தொன்னூல் விளக்கம், இயேசு நாதரின் வரலாற்றைக் கூறும் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை உள்ளிட்ட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றிய தொண்டினைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!