தனித்து போட்டியிட திமுக தாயாரா என அண்ணாமலை மீண்டும் சவால்.

இந்தியாவிலேயே தனித்து போட்டியிட்டு தேர்தல்களை சந்திக்காத ஒரே கட்சி, திமுக தான் என்றும் வரும் மக்களவை தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட தயாரா? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் சவால் விடுத்துள்ளார். அவரது இந்த கருத்து பேசும் பொருளாக மாறியுள்ளநிலையில், கட்சி தொங்கப்பட்ட நாளில் இருந்தே திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை என்றும் இது நாள் வரை கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரை, 1967-க்குப் பிறகு திராவிடக்கட்சிகளே ஆண்டு வருகின்றன. ஆனாலும் திமுக இதுவரை தனித்து போட்டியிட்டதில்லை என்ற விமர்சனம் உண்டு. மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு, முன்பாக 1952- ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற தேர்தலை திமுக புறக்கணித்தது. அதன் பின் 1956-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் தான், தேர்தலில் திமுக போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நிரந்தர சின்னம் கிடைக்காததால் சேவல், உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர்கள் சுயட்சையாக போட்டியிட்டனர்.

அப்போது சில தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. 1962 ஆம் ஆண்டு ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சிகளுடன் இணைந்து முதல்முறையாக கூட்டணியில் போட்டியிட்டது.. அந்த ஆண்டு உதயசூரியன் சின்னத்தை நிரந்தரமாக பெற்று திமுக போட்டியிட்ட போதிலும் பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை. பின்னர் 1967- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் சுதந்திரக்கட்சி, முஸ்லிம் லீக் ,சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 1971 மற்றும் 1980-ம் அண்டு தேர்தலில்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தே திமுக போட்டியிட்டது. இந்நிலையில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, எம்.ஜி.ஆர்.திமுகவில் இருந்து பிரிந்து 1972- ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். அக்கட்சி 1977 தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றி எம்ஜிஆர் முதலமைச்சரானார்.

அதிலிருந்து அதிமுகவே ஆட்சியில் இருந்து வந்தது.. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னரே, 1989 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991 ஆம் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார். இதில் கடந்த 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.. எனவே காங்கிரஸ் பாமக கட்சிகளின் ஆதரவுடனே திமுக ஆட்சி அமைத்தது. இதுவே திமுக அமைந்த முதல் மைனாரிட்டி ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களை கைப்பற்றியிருந்தது..

அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கிட்டத்தட்ட 12 கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்தித்தது.. இப்படி திமுக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வெற்றிப் வெற்றி பெற முடியாது என்பதால், மற்ற கட்சி களை கூட்டணிக்கு பணியவைக்க பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்;தார். இதற்கு ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முடிந்தால் திமுக தணித்து போட்டியிட்டு தேர்தல் சந்திக்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார்..

இந்நிலையில் தூதுக்குடியில் செய்தியாளர்களிடம் பேசி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? என மீண்டும் சவால் விடுத்தார்.. திமுக தொடங்கிய நாளில் இருந்து இதுநாள் வரை தனித்து போட்டியிட்டதாக வரலாறே இல்லை என்றும் 1967 ஆம் ஆண்டு சுதந்திர மற்றும் சிபிஎம் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 2021- ஆம் தேர்தலிலும் 12 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டது என்றும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்து வருதாக கூறப்படும் நிலையில், தனித்து போட்டியிட திமுகவுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!