மக்களவை தேர்தல் கூட்டணிக்கான கதவுகளை இதுவரை பெரியக்கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமால் இழிபறியே நீடித்து வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக முறித்து காரணங்களால், அதிருப்தியடைந்துள்ள நிர்வாகிகள், பலர் மக்களைவை தேர்தலில் போட்டியிட்ட தயங்கி விருப்ப மனுக்களை கூட தாக்கல் செய்யாமல் நழுவி விட்டனர். இதனால் கடும் கோபமடைந்த இபிஎஸ், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் கட்டாயம் விருப்பமனுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதலமைச்சர்? என்ற கேள்வி எழுந்தது.
கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக எம்எல்ஏக்கள் தப்பி ஒட்டம் என அடுத்தடுத்து சம்பங்கள் அரங்கேறின. சசிகலா தான் முதலமைச்சர் என்று கட்சியில் இருந்த ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. அதன் பின்னர் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக துணையோடு இபிஎஸ் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் என்பதும் அதிமுகவை தன்வசப்படுத்தி கொணடார் என்பதும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனமாகும். அதன் பின்னர் திமுக கொடுத்த அழுத்தம் உள்கட்சி குழப்பம் என கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதற்கு எடப்பாடி கடுமையான நெருக்கடியை சந்தித்தார்.
சில மாதங்கள் வரை ஆட்சி நீடிக்காது என்றும் எப்போது வேண்டுமனாலும் ஆட்சி கவிழும் என்று கூறப்பட்ட நிலையில் பாஜக ஆதரவு அளித்த காரணத்தால் தான், இபிஎஸ் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடிந்தது என்பதே நடுநிலையார்கள் கருத்தாக உள்ளது. பாஜக உதவியோடு தான் இபிஎஸ் தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தார் என்று ஒபிஎஸ் பலமுறை குறிப்பிட்டுள்ளார். எனினு இபிஎஸ் தனது திறனற்ற செயலால், சட்டமன்ற தோல்விக்கு பிறகு அடுத்தடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்விகளையே சந்தித்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்த போது இபிஎஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை, சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என அடுத்தடுத்து நடைபெற்ற தோல்விகளால் பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது.. ஒரு கட்டத்தில், ஆட்சியை காப்பாற்ற பேர் உதவியாக இருந்த பாஜகவுடன் உரசல் போக்கை கைப்பிடித்தது போன்ற இபிஎஸ்-சின் அணுகுமுறைகள், கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும், இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியதாக மூத்த தலைவர்களே கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக பாஜகவுடன் உரசல் போக்கை ஏற்படுத்தி, தன்னிச்சையாக இபிஎஸ் செயல்பட்டதாகவும் பாஜக கூட்டணியின்றி தன்னித்து போட்டியிட்டால் சிறுபாண்மையினரின் வாக்குகள் கிடைத்துவிடும் என்று தப்பு கணக்கு போட்டதாகவும் இதுவே தற்போது எதிரொலித்து வருதாகவும் கூறப்படுகிறது.
ஏன்னென்றால் அதிமுகவில் பெரும்பாலான தலைவர்கள் பாஜகவுடனே கூட்டணி தொடர விருப்புவதாகவும், இதற்கு மாறான சூழலே, இருப்பதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டுள்ளதால் அதிமுகவுடன் செல்ல மற்றக் கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றனர். இது ஒருபுறம் இருக்க இபிஎஸ் திடீரென திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து சட்டமன்றத்தில் ஒரு நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தது அதிமுக தொண்டர்கள் மத்தியிலேயே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து போராட்டங்களை நடத்தி வருவது, தமிழகத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதன் மூலம் திமுகவுக்கு உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே உருவெடுத்துள்ளது என்ற கருத்தும் நிலவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் மக்களை தேர்தலில் போட்டியிடவே அதிமுகவினர் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பாஜகவை பகைத்து கொண்டு இபிஎஸ் செயல்படுவதால், எம்பி தேர்தலில் போட்டியிடுவது தேவையற்ற பிரச்னைகளை தான் தரும் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகள் திமுக வே ஆட்சியில் இருப்பதால் தங்களுக்கு எந்த பலனும் இருக்காது என்று அவர்கள் நினைப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்திப்பது தேவையற்ற பணசெலவு தான் ஏற்படும் என கருதி, மாவட்ட செயலாளர்களே தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், கடும் கோபம் அடைந்து அனைத்து மாவட்ட செயலாளர்களை கட்டாயம் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாகவும் வெளியாகி உள்ளது. இதுவே பரப்பரப்பு தேர்தல் செய்தியாக பரவி வருகிறது.