விடாமுயற்சி படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்து வந்தார் அஜித். அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். வருகிற 15-ம் தேதி விடா முயற்சி படபிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி!
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/03/PP-03-2.jpg)