திமுக எம்எல்ஏ மகன் மருமகள் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி..

திமுகவை சேர்ந்த பல்லாவரம் தொகுதி கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ அவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிப்புரிந்து வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? என்று நீதிபதி வினவினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சனையில் காவல்துறை ஏன் மெத்தனமான நடந்து கொள்கிறது? என்று கேட்டார். திமுகவை சேர்ந்த பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா தம்பதியர் சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையை சேர்ந்த 18 வயது பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டார். அந்த பெண் நீலங்கரை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஓன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், 12ம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு மேல் படிப்பு படிக்க பணம் தேவைப்பட்டதால் 16,000 ரூபாய் சம்பளத்தில், திமுகவை சேர்ந்த எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மதிவாணன், வீட்டில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தன்னை அவர்கள் இருவரும் கொடுமைப்படுத்தி, தாக்கியதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். தன்னை அடித்து சித்திரவாதை செய்ததாகவும், சிகரெட்டில் சூடு வைத்து காயப்படுத்தியதாகவும், கரண்டியால் அடித்து காலால் எட்டி உதைத்து துன்புருத்தியதாகவும் குறிப்பிட்டிருந்த அந்த பெண் உடலில் இருந்த காயங்களை கட்டி கண்ணீருடன் பேசியிருந்தார்.. தனது படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்ததாகவும் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக அமைப்பினர் வலியுறுத்தினர். அந்த பெண் புகார் அடிப்படையில் மதிவாணன், மெர்லினா தம்பதியர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 18 ஆம் தேதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாரை மெர்லினா மறுத்திருந்த நிலையில் அது தொடர்பாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார், மதிவாணன் மெர்லினா தம்பதியரை ஆந்திராவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களது ஜாமின் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பணிப்பெண்னை தங்கள் வீட்டுப்பெண் போல் நடத்தியதாக குறிப்பிட்டார்.. கல்லூரி படிப்புக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் பிறந்தநாளை மிகவும் மகிழ்சியாக கொண்டாடியுள்ளனர் என வாதிட்டத்துடன், அது தொடர்பான புகைப்படங்களையும் தாக்கல் செய்தார். அது மட்டுமின்றி கடந்த 15- தேதி அந்த பெண்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் கரண்டி உள்ளிட்டவைகளால் தாக்கிய சிசிடிவி காட்சிகளை மனுதார்களின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்றிஞர் மோகன் பணிப்பெண்ணுக்கு மிகவும் கொடூரமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என கூறினார். அந்த பெண் படிக்க விரும்பிய படிப்பபைக் கூட படிக்க விடவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என்றும், புகாருக்குள்ளான இரண்டு பேரிடம் விசாரணைக்கூட நடத்தவில்லை என்றும் வழக்கறிஞர் மோகன் குறிப்பிட்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டடத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் ஆனால் எந்த முன்னேற்றமும் இந்த வழக்கில் இல்லை என்றும் கூறினார். அந்த வாதத்தை கேட்ட நீதிபதி முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற மனுதாரரின் குற்றசாட்டுக்கு காவல்துறையின் பதில் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காவல்துறை வழக்கறிஞர் பிரதாப், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார். இதற்கு தனது அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற தனிமனித உரிமை சார்ந்த வழக்குகளின் காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் பதில் மனுவை வெள்ளிகிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் மனுதார்கள் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!