திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நெல்லையப்பர் தேர் போன்ற நினைவுப் பரிசினை பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, அனைவருக்கும் வணக்கம் என்றும் நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கும் வணக்கம் என்றும் கூறினார். நெல்லை அல்வாவைப் போன்ற இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைத்து தரப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும். இது பிரதமர் நரேந்திர மோடியின் கேரண்டி என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி – பிரதமர் மோடி பேச்சு!
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/02/PP-02-1.jpg)