புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிணற்றில், 100க்கும் மேற்பட்ட பண்டல்களாக, 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அதிகாரிகள், சீருடைகளை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சீருடைகள், கடந்த, 2018- – 2019 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்கள் சீருடை குவியலாக கிணற்றில் மீட்பு!
