கோவையில் ராயல்கேர் மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம், பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மருத்துவ துறையில் நோயை கண்டு பிடிக்கவும்,நோயை குணப்படுத்தவும்,மருத்துவ கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த டெக்னீஷயன்கள் பாதுகாப்பாக கையாள்வது குறித்த கருத்தரங்கம் கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இந்தியன் ஃபார்மாகோப்பியா கமிஷன் மற்றும் மத்திய அமைச்சகத்தின் குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் இணைந்து நடத்திய விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,எம்.வி.பி.ஐ.முதன்மை விஞ்ஞானி கலைசெல்வன், மருத்துவர்கள் பரந்தாமன், சேதுபதி, மணி, செந்தில் குமார், காந்திராஜ், சதுரஞ்ஜெய்சுக்லா, ஹரிஹரன், அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!