சென்னை குமணன்சாவடியில் ஜவஹர்லால் நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி , எம்.எம்.ஆர்ட் கேலரி மற்றும் நம் பாரத சேவை தொண்டு அறக்கட்டளை நிறுவனம் இணைந்து கண்கவர் பொங்கல் வரைபடத்தை 223 பங்கேற்பாளர்கள் ஃபெவிகிரிலின் பேஸ்டல் வண்ண நிறங்களை கொண்டு ஓவியத்துக்கு வண்ணம் தீட்டினர். 203 பேர் இணைந்து ஒரு குழுவாக ஃபெஸ்டிவல் ஆப் அபாண்டன்ஸ் – பெயிண்ட் த பொங்கல் ஸ்பிரெட் – 2024 என்ற தலைப்பில் இந்த உலக சாதனையாக செய்து முடித்துள்ளனர். இந்த சாதனையை இக்னீசியஸ் ஷாம் உலக சாதனை என்ற நிறுவனம் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியில் நம் பாரத சேவை நிறுவனத்தின் நிறுவனர் பால சரவணன், இக்னீசியஸ் ஷாம் உலக சாதனை என்ற நிறுவனத்தின் நிறுவனர்கள் ஆனந்த ராஜேந்திரன் மற்றும் பிந்து பிரியங்கா, ஜவஹர்லால் நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் ராகேஷ் கமலக்கண்ணன், பள்ளி முதல்வர் சுமதி ராஜவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வசுமதி சிறப்பாக செய்திருந்தனர்.
உழவர்களை போற்றும் வகையில் வண்ண ஓவியங்கள் வரைந்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/01/CLG-out.jpg)