விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தரைமட்டமாகின. இதில் பட்டாசு ஆலையில் வேலை செய்துவந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு தயாரிக்கும்போது வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/01/Pattasu.jpg)