பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் மதுரை வந்திருந்த போது அவரை தமிழக அமைச்சர் ஒருவர் ரகசியமாக சந்தித்தாக தகவல் வெளியானது. ஆனால் அந்த அமைச்சர் யார் ?என்பது குறித்தும் அது பற்றிய தகவல் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. முதமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் படியே இந்த சந்திப்பு நிகழந்ததாக பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும் மாநில நிதியமைச்சராக பதவியேற்றவர் பிடிஆர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிதி அமைச்சராக பதவி ஏற்ற அவர், நிதித்துறை, அரசு நிர்வாகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பேசு பொருளாயின. இதனால் ஊடகங்களில் அவர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்தன. திடீரென உதயநிதி, சபரீசன் குறித்து, பிடிஆர் பேசியதாக அண்ணமலை வெளியிட்ட ஆடியோ பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து விளக்கம் அளித்திருந்த பிடிஆர் அந்த வீடியோ ஏஐ தொழில் நுட்பத்தில் உருவானது என்றும் கூறியிருந்தார். ஆனால் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பிடிஆர்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஒருக்கட்டத்தில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த பிடிஆர் மாற்றப்பட்டு, அவருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டு நிதித்துறை தங்கம் தென்னரசுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் தொழில் நுட்பத்துறை அமைச்சக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பிடிஆரை வெகுவாக பாராட்டினார். நிதித்துறையை போல் தகவல் தொழில் துறையையும் சீரமைக்கவே அந்த துறைக்கு பிடிஆர் வழங்கப்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி பிரதமர் மதுரைக்கு வந்திருந்த போது மதுரைக்கு சென்று மீனாட்சி அம்மனை தரிசித்தார்.
அதன் பின்னர் பசுமலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுத்தியில் இரவு ஓய்வெடுத்தார். அப்போது அவரை தமிழக அமைச்சர் ஒருவர் ரகசியமாக சந்தித்தாக தகவல் வெளியானது. ஆனால் அவர் குறித்த தகவல் வெளிவராமல் இருந்த நிலையில் பிரதமரை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ரகசியமாக சந்தித்து 15 முதல் 20 நிமிடம் வரை பேசியதாக பின்னர் பேசப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வாமாக வெளியிடப்படாமல் இருந்ததால் தொடர்ந்து மர்மம் நீடித்ததால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பிரதமரை எதற்காக பிடிஆர் சந்தித்தார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் பிரதமரை சந்தித்தது குறித்து பிஆர்ஆர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் ஒரு இடத்திற்குச் செல்லும் போது புரோட்டகால் அடிப்படையில் அந்த மாநில அரசு சார்பில் அவரை வரவேற்கவும், உதவி செய்யவும் ஒருவரை அனுப்புவது வழக்கம் என்றும் அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தனக்கு வந்த உத்தரவின் அடிப்படையிலேயே பிரதமரை சந்தித்ததாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்க பணி நிமித்தமாகவே பிரதமரை சந்தித்தேன் என்றும் பிரதமரை சந்தித்து தனிப்பட்ட விருப்பத்தின் அல்லது அரசியல் காரணங்களுக்காகவே இல்லை என்றும் பிடிஆர் விளக்கியுள்ளார்.
.