தமிழக பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றனர். கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழக குழுவினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர். இதற்கிடையில் அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள். மீண்டும் வருகிற 11-ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். மறுநாள் 12-ந்தேதிக்குள் தமிழக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்ட தொகுதிகளும் அதில் பரீசிலிக்கப்பட்ட வேட்பாளர்கள் பெயர் விபரமும் கசிந்து உள்ளது. கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி. கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் பரிசிலிக்கப்பட்டது. நீலகிரியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, கடலூரில் சாய் சுரேஷ், அஸ்வத்தாமன், விழுப்புரத்தில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, திருவள்ளூர் பொன் பால கணபதி, மதுரையில் மகாலெட்சுமி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் கரு.நாகராஜன், கிருஷ்ணகிரியில் கே.எஸ். நரேந்திரன், முன்னாள் எம்.பி.நரசிம்மன், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், பொள்ளாச்சி-ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் கனகசபாபதி, ராமநாதபுரம் தேவநாதன், கருப்பு முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர் காயத்ரி தேவி, சுமதி வெங்கடேஷ், காஞ்சிபுரம் மா.வெங்கடேசன், சிதம்பரம் தடா பெரியசாமி, அரக்கோணம்-எம்.கே.ரவிச்சந்திரன். வடசென்னை பால் கனகராஜ், ஏ.என்.எஸ். பிரசாத், மத்திய சென்னை குஷ்பு, வினோஜ் செல்வம், தென்சென்னை எச்.ராஜா, எஸ்.ஜி.சூர்யா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.