ஒரு அமைச்சராக இருப்பவர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டாமா?, இது போன்று பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்திருக்க வேண்டாமா? சனாதன ஒழிப்புப் பற்றி அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கில் அவரிடம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தான் இவையாகும். உதயநிதி பேசிய சனாதன ஒழிப்பு பேசுக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு உகந்ததே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. என்றாலும் இந்துமதம், இந்தியா பற்றிய அவதூறு பேசுவதை திமுக நிறுத்திய பாடில்லை என்பதே பாஜகவின் குற்றச்சாட்டாக உள்ளது. இப்படி திமுக பேசும் பேச்சுக்கு காங்கிரஸின் நிலைப்பாடு என்ற கேள்விதான் தற்போது பாஜக முன்வைக்கும் கேள்வியாக இருந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பேச்சு ஐந்து மாநில தேர்தலின் தங்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே புலம்பியதாக கூறப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்பி ஆர். ராசா, இந்தியா ஒரு தேசமே அல்ல என்றும் நாங்கள் ராமருக்கு எத்திரானவரகள் அல்ல என்றும் பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சுக்களின் மூலம் ஆ.ராசா, சுயப்பிரகடனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாஜக தகவல் தொழில் நுட்பபிரிவு தலைவர் அமித் மாள்வியா, திமுகவின் பேச்சு எல்லை மீறி செல்வதாக கண்டித்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பின்னர் இப்போது திமுக எம்பி ஆ.ராசா நாட்டை துண்டாக்கும் பார்வையை முன்வைத்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான அமித் மாளவியா அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆ.ராசா, கடவுள் ராமரை அவதூறாக பேசுகிறார் என்றும், மணிப்பூர் மக்கள் பற்றி தரக்குறைவான கருத்துகளை பதிவிடுகிறார். இந்தியா என்ற தேசத்தை கேள்விக்குள்ளாக்குகிறார் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிந்து மதத்தையும் கடவுளையும் பற்றியும் அவதூறாக பேசும் திமுக எம்பி. ஆ.ராசா இப்போது ஒரு பாடி மேலே போய் இந்தியா ஒரு நாடே இல்லை என்றும் ராமருக்கு திமுக வினர் எதிரிகள் என்றும் பேசி பெரும் பிரச்சினையை தூண்டி இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் தொடர்ந்து ஹிந்து கடவுள்களை அவமதிக்கிறார்கள். நாட்டை பிரிக்க நினைக்கிறார்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிகிறார்கள் என விமர்சித்துள்ள அனுராக் தாகூர், ஆ.ராசவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்நிலையில் மக்களவை தேர்தல் நேரத்தில் ஆ.ராசா, ராமருக்கு எதிராக பேசி இருப்பது, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆ.ராசாவின் பேச்சு மக்களவை தேர்தலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் குறிப்பாக வட மாநில மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்று உணர்ந்துள்ள இந்திய கூட்டணி தலைவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆ.ராசாவின் பேச்சை கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத்திடம் அவரது கருத்தில் 100 சதவீதம் தான் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார். பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள சுப்ரியா ஸ்ரீநாத், இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர், சமூகங்கள், மதங்கள், மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், என்றும் ராமன் என்பதற்கு கண்ணியம், நெறிமுறை காதல் வாழ்க்கையின் லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆ.ராசாவின் பேச்சுக்கு ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் உத்வ் தாக்கரே போன்றோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆ.ராசாவின் ராமர் குறித்த பேச்சு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறிகின்றனர்.